பெட்ரோலில் தண்ணீர் கலப்பு - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

dharmapuri public shocked petrol water mix
By Anupriyamkumaresan Oct 24, 2021 12:58 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

தருமபுரியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பெட்ரோலில் தண்ணீர் இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் தடங்கம் பகுதியில் செயல்படும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் குடிநீர் கேனில் பெட்ரோல் வாங்கியுள்ளார்.

அப்போது பெட்ரோலில் 80 சதவீத அளவுக்கு தண்ணீர் கலந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரும், மற்ற வாடிக்கையாளர்களும் சேர்ந்து பெட்ரோல் பங்க் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெட்ரோலில் தண்ணீர் கலப்பு - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி | Dharumapuri Petrol Water Mix Public Shocked

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், பெட்ரோல் பங்க் தற்காலிகமாக மூடப்பட்டது.

அண்மையில் பெய்த மழைநீர் பெட்ரோல் சேமிப்பு கிடங்கில் கலந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள பங்க் உரிமையாளர், இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னரே பெட்ரோல் பங்க் திறக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.