முன்னனி நடிகைக்கு ரகசிய திருமணம் - குடிபோதையில் வந்து திருமணத்தை நிறுத்திய நடிகர்!
நடிகை ஹேமமாலினி திருமணத்தை நிறுத்த நடிகர் தர்மேந்திரா குடிபோதையில் வந்த சம்பவம் தற்போது பேசப்பட்டு வருகிறது.
நடிகை ஹேமமாலினி
பிரபல பாலிவுட் நடிகரான தர்மேந்திராவும், நடிகை ஹேமமாலினியும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு இஷா, அஹானா என இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் இஷா நடிகையாக களமிறங்கிவிட்டார்.
இந்நிலையில், ஹேமமாலினி தன் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் தெரிவித்த ஒரு குறிப்பிட்ட சம்பவம் தான் பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே திருமணமான தர்மேந்திராவை மணக்க ஹேமமாலினியின் அம்மா ஜெயா சக்ரவர்த்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
திருமணம்
அதனால் நடிகர் ஜிதேந்திராவை திருமணம் செய்து கொள்ளுமாறு ஹேமாவை வலியுறுத்தியுள்ளார் ஜெயா. ரகசிய திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் சென்னைக்கு சென்றுள்ளனர். ரகசிய திருமணம் குறித்து அறிந்த தர்மேந்திராவோ ஜிதேந்திராவின் காதலி ஷோபாவை அழைத்துக் கொண்டு குடிபோதையில் அங்கு சென்றுள்ளார்.
அதனையடுத்து ஹேமாவுடன் தனியாக பேசியுள்ளார். அதன்பின், ஜிதேந்திராவை மணக்க முடியாது என்று தலையை அசைத்துள்ளார். இதனால், அவமானம் தாங்காமல் தன் பெற்றோரை அழைத்துக் கொண்டு அங்கிருந்து ஜிதேந்திரா கிளம்பிச் சென்றுள்ளார்.
அதனையடுத்து, 1974ல் ஷோபாவை மணந்தார் ஜிதேந்திரா. இவர்களுக்கு ஏக்தா, துஷார் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.