மனைவியின் உடலில் உள்ள 16 இடங்களில் சூடு வைத்து சித்ரவதை செய்த கொடூர கணவன்! என்ன நடந்தது?
பெண்ணாகரத்தில் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரது உடல் முழுவதும் 16 இடங்களில் சூடு வைத்து சித்ரவைத செய்த கொடூர கணவனின் வெறிச்செயல் தற்போது அம்பலமாகியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே ஏரியூர் அடுத்த எம்.தண்டா கிராமத்தை சேர்ந்த பாண்டியனுக்கு, பத்ர அள்ளி கிராமத்தை சேர்ந்த கலைவாணிக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
பாண்டியன் ஏற்கனவே திருமணம் முடிந்து, மனைவி இறந்ததால் கலைவாணியை 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார். முதல் திருமணம் குறித்து கலைவாணி குடும்பத்தாரிடம் மறைத்து 2வது திருமணம் முடித்துள்ளனர். இந்த சம்பவம் கலைவாணி காதுக்கு வரவே, ஏன் மறைத்தீர்கள் என அடிக்கடி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மனைவியுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியே சென்ற கணவன் 3வதாக பென்னாகரம் அருகே திருமணமான பெண்ணுடன் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளார்.
இதனால் தற்போதைய கள்ளக்காதலியின் பேச்சை கேட்டு அடிக்கடி மனைவி, குழந்தைகளை ஆபாசமாக பேசியும், அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் ஊர் பொதுமக்கள் சமாதானம் செய்து கல்யாணியை கணவரோடு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினார் ஒன்றாக இணைந்து திட்டமிட்டு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கலைவாணியை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்துள்ளனர்.
அவர் அரை மயக்கமடைந்த நிலையில், கலைவாணியின் கை, கால், மார்பு உள்ளிட்ட 16 இடங்களில் காய்ச்சிய இரும்பு கம்பியால் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.
அப்போது அலறல் சத்தம் கேட்டு விடக்கூடாது என்பதற்காக கலைவாணியின் கை, கால்களை துணியால் கட்டி வைத்தும், வாயில் துணி வைத்தும் இறுக்கமாக கட்டியுள்ளனர். நீண்ட நேர சித்ரவதைக்கு பிறகு கட்டை அவிழ்த்து இது குறித்துவெளியே கூறினால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர்.
நேரம் பார்த்து காத்திருந்த கலைவாணி அங்கிருந்து தப்பி அவரது
பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். நடந்ததை அறிந்த பெற்றோர்கள்
போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரை தொடர்ந்து போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.