தரிசு நிலம் அதிகமுள்ள அதியமான் ஆண்ட தர்மபுரி மாவட்டத்தின் வரலாறு தெரியுமா?

Tamil nadu Dharmapuri
By Karthick Aug 29, 2023 10:56 AM GMT
Report

தரிசு நிலங்கள் அதிகமாக இருக்கும் போதும் தருமபுரி மாவட்டம் தான் மலர் உற்பத்தியில் தமிழகத்தில் 3-வது பெரிய மாவட்டமாக இருக்கிறது.

தருமபுரி 

சங்க கால மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சி ஆட்சி பிரிந்த நகரமான தருமபுரி,சென்னை மற்றும் பெங்களூருக்கு நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. 4497.77 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ள இந்த மாவட்டம், 1965 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. பின்னர் 2004 ஆம் ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் தருமபுரி மாவட்டத்திலிருந்து தான் பிரிக்கப்பட்டது.

dharmapuri-history-in-tamil

தருமபுரி மாவட்டதில் ஒரு நகராட்சி, 10 பேரூராட்சிகளும், 10 ஊராட்சி ஒன்றியங்களும், 251 கிராம ஊராட்சிகளும் இருக்கின்றன. தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி மக்களவைத் தொகுதி என ஒரு மக்களவை தொகுதியும், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர் என 5 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன.

வரலாறு  

தகடூர் என சங்ககாலத்தில் குறிப்பிடப்படும் இந்த இடத்தை அதியமான் நெடுமான் அஞ்சி ஆண்டு வந்தார். சேரமான் தகடூர் ஏறிய கோப்பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் அரசன் அதியமானிடமிருந்து இதனைக் கைப்பற்றி ஆண்டிருக்கிறார்.

dharmapuri-history-in-tamil

8 ஆம் நூற்றாண்டில் பல்லவ அரசர்கள் கட்டுப்பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, 9 ஆம் நூற்றாண்டில் இராஷ்டிரகூடர்களும், பின்னர் 11 ஆம் நூற்றாண்டில் சோழர்களாலும் ஆட்சி செய்யப்பட்டு வந்த இவ்விடம் 18 ஆம் நூற்றாண்டின் போது, மைசூர் ராஜ்யத்திற்கு கீழ் இருந்தது.

திப்பு சுல்தான் தருமபுரி மாவட்டம் உள்ளிட்ட தனது பிரதேசங்களில் ஒரு பகுதியை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம் வழங்கினார். பின்னர் இது பிரித்தானிய இந்தியாவின் நிர்வாக துணைப்பிரிவான, மெட்ராஸ் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.

பெயர் காரணம்  

சங்ககாலங்களில் அழைக்கப்பட்ட தகடூர் என்ற பெயர், இரண்டு தமிழ் சொற்களிலிருந்து உருவானது."தகடு" மற்றும் "ஊர்" என்ற பெயர்களை சேர்த்து தகடூர் என்ற பெயர் வந்தது. பின்னர் எப்போது தருமபுரி என பெயர் மாற்றப்பட்டது என்பது தெளிவாக தெரியாத நிலையிலும், இப்பெயர் விஜயநகரப் பேரரசு ஆட்சியில் அல்லது மைசூர் அரசு ஆட்சியில் மாறியிருக்கலாம் என கூறப்படுகிறது.

தருமபுரி பொருளாதாரம்

தருமபுரி மாவட்டத்தில் அதிகளவில் தரிசு மற்றும் தரிசு நிலங்கள் பரந்து விரிந்துள்ளன. இம்மாவட்டத்தில், 42,846 ஹெக்டேர் நிலம் 1999-ஆம் ஆண்டில் தரிசாகப் பயிர் செய்ய முடியாத நிலங்களாகக் கண்டறியப்பட்டு, தொழிற்சாலைக் உருவாக்க பயன்படுத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது.

dharmapuri-history-in-tamil 

தருமபுரி மாவட்டத்தில் SSI துறைக்காக SIDCO 5 தொழிற்பேட்டைகளை நிறுவப்பட்டுள்ளன. DIC மின் மற்றும் மின்னணுத் தொழில்களுக்கான இம்மாவட்டத்தில் தொழிற்பேட்டையை நடத்துகிறது. சிப்காட் தொழிற்பேட்டையில், நடுத்தர மற்றும் பெரிய அளவிலான யூனிட்களுக்கான தொழில்துறை வளாகம் ஓசூரில் நிறுவப்பட்டுள்ளது.

dharmapuri-history-in-tamil

அதே நேரத்தில் இம்மாவட்டத்தில் குறைந்த எழுத்தறிவு விகிதம் மக்கள் இருப்பதால் தொழில்துறையை விட விவசாயத்தில் மக்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். தமிழகத்தின் மலர் உற்பத்தியில் தர்மபுரி மாவட்டம் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. உளுந்து, பட்டாணி, முட்டைகோஸ், கொள்ளு,பச்சைப் பயறு, துவரை, நெல், இஞ்சி, அவரை, காராமணி, மொச்சை, சோளம், கேழ்வரகு, கம்பு, பருத்தி, நிலக்கடலை, கரும்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, கடுகு, போன்றைவை இங்கு அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன.

ஒகேனக்கல் 

கர்நாடகா-ஆந்திர பிரதேச எல்லையில் காவிரி ஆற்றில் அமைந்துள்ள ஒகேனக்கல் அருவி, தருமபுரியில் இருந்து 46 கி.மீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 180 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.பல அருவிகளின் தொகுப்பாக ஒகேனக்கல் அருவி இருக்கிறது.

dharmapuri-history-in-tamil

தலைநீர் என இந்த நீர்வீழ்ச்சி சங்ககாலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைச் சூழ்ந்திருந்த நாடு தலைநீர் நாடு எனப்பட்டது. திப்பு சுல்தான் காலம் முடிய வரிவாங்கும் அதிகாரிகள் கன்னடம் பேசுபவர்களாக இருந்த காரணத்தால் தருமபுரி மாவட்டத்து ஊர்ப் பெயர்கள், மலைப்பெயர்கள், ஆறுகளின் பெயர்கள் ஆகியவற்றைக் கன்னடப் பெயர்களாக வருவாய்த்துறைப் பதிவேட்டில் பதிவு செய்தனர். அதை அப்படியே ஆங்கிலேயர் காலத்திலும் பின்பற்றினர். அது இப்போதுவரை தொடர்கிறது. இங்கு பரிசல் மூலம் சுற்றுலாப் பயணிகளை அருவிகளுக்கு அருகே அழைத்துச்செல்வார்கள். எண்ணெய்க் குளியல் இங்கு பிரபலம்.

தீர்த்தமலை  

ஹரூர் தாலுகாவில் அமைத்துள்ள தீர்த்தமலையின் உச்சியில் ஸ்ரீ தீர்த்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சோழர் மற்றும் விஜயநகர மன்னர்கள் இக்கோயிலுக்கு பல நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

dharmapuri-history-in-tamil

மகாசிவராத்திரியின் போது ஏராளமான பக்தர்கள் கோவிலில் சிவன் வழிபாட்டிற்காக ஒன்றுகூடுவர். பக்தர்களின் வசதிக்காக, சுற்றுலாத் துறை விருந்தினர் மாளிகைகளை கட்டப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக தீர்த்தமலை அறியப்படுகிறது.

சோமேஸ்வரர் கோவில் 

மேற்கு பார்த்த ஈஸ்வரன் சோமேஷ்வரர் கோவிலில் அருள் புரிகிறார். சிவனை தொடர்ந்து இக்கோவிலில் மேற்கு பார்த்த விநாயகர், மேற்கு பார்த்த முருகர் தெற்கு நோக்கிய சோமாம்பிகை, தெற்கு நோக்கிய தட்ச்சிணா மூர்த்தி, தெற்கு பார்த்த சண்டிகேஸ்வரர் கடவுள்கள் வீற்றிருக்கின்றனர்.

dharmapuri-history-in-tamil

மேற்கு பார்த்த ஈஸ்வரன் கோவில் வேரெங்கும் இல்லை. இக்கோவிலானது சிவன் வழிபாடு மேற்கொள்ளும் சித்தர்கள் வழிபட்ட ஸ்தலமாகும். அதன் பிறகு ஷைண மதம் வழிபாடு செய்து திருக்கோவில் ஷைணமத திருச்சிலை இங்கு உள்ளது.

பூஜைகள் 

இக்கோவிலில் தினப்பூஜை, பிரதோஷம் பௌர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்று வருகின்றது. மாசி மாதம் மகம் நட்சத்திரம் அன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பூஜை சிவனுக்கு இக்கோவிலில் நடைபெறுவது வழக்கமாகும். இக்கோவிலில் சூரிய ஒளியானது நுழைவாயில் வழியாக சூரிய வெளிச்சம் கடவுள் மேல் அந்த 3 நாட்கள் விழும்.