சாகும் வரை உண்ணாவிரதம்; தருமபுரம் ஆதீனம் கொதிப்பு - என்ன காரணம்?

Mayiladuthurai
By Sumathi Oct 08, 2025 06:15 AM GMT
Report

சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக தருமபுரம் ஆதீனம் அறிவித்துள்ளார்.

தருமபுரம் ஆதீனம் 

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தின் 24 ஆவது மடாதிபதி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு 25 ஆவது மடாதிபதி காலத்தில் மகப்பேறு மருத்துவமனை திறக்கப்பட்டது.

dharumapuram aadheenam

தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கட்டடம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு சர்ச்சை வெடித்தது. தற்போது அந்த இடத்தில் நகராட்சி அலுவலகம் கட்டுவதற்காக பூமி பூஜை நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.

ஆழ்கடலிலும் தமிழர் வரலாறு; 15 ஆயிரம் ஆண்டு பழமை - திகிலூட்டும் தகவல்!

ஆழ்கடலிலும் தமிழர் வரலாறு; 15 ஆயிரம் ஆண்டு பழமை - திகிலூட்டும் தகவல்!

சாகும் வரை உண்ணாவிரதம்

இந்நிலையில் தருமபுரம் ஆதினம் சார்பில் இன்று பேஸ்புக் சமூக வலைதளத்தில் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், இலவச மகப்பேறு மருத்துவமனையை இடிக்கப் போவதாக முன்பு தகவல் வந்தது.

சாகும் வரை உண்ணாவிரதம்; தருமபுரம் ஆதீனம் கொதிப்பு - என்ன காரணம்? | Dharmapuram Adheenam Fasting Till Death

முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று நிறுத்தப்பெற்றது. மீண்டும் நாளை பூமி பூஜை போடுவதாக அறிந்தோம். வெளியூர் நிகழ்வில் இருக்கிறேன் இதை தடுத்து நிறுத்த வேண்டும்.

இல்லையென்றால் உயிர்போகும் வரை உண்ணாவிரதம் இருந்து முன்னோர்கள் கட்டியதை காப்போம் என குறிப்பிட்டுள்ளார்.