விவாகரத்தால் நிறைவேறாமல் போகும் தனுஷின் ஆசை - சோகத்தில் ரசிகர்கள்

Rajinikanth dhanush soundaryarajinikanth Aishwaryarajinikanth
By Petchi Avudaiappan Feb 09, 2022 06:31 PM GMT
Report

மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதால் தனுஷின் ஆசை நிறைவேறாமல் போகுமோ என அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். 

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 18 ஆண்டுகள் கழிந்த நிலையில் இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.

இதனிடையே கடந்த மாதம் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர். இந்த சம்பவம் ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

விவாகரத்தால் நிறைவேறாமல் போகும் தனுஷின்  ஆசை - சோகத்தில் ரசிகர்கள் | Dhanushs Wish Wont Be Fulfilled After Divorce

இதற்கிடையில் ரஜினி நடித்த காலா படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் மூலமாக தயாரித்தார். தலைவருடன் நடிக்க வேண்டும் என பல நிகழ்ச்சிகளில் கூறிய தனுஷால் அந்த படத்தில் கூட நடிக்க முடியவில்லை. 

அதேசமயம் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்த தனுஷ் ரஜினியின் 170வது படத்தை இயக்குவார் என தகவல் வெளியாகி இருதரப்பு ரசிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தை ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இருவரும் தயாரிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதால் தனுஷின் ஆசை இனி நிறைவேறுவது கஷ்டம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.