உலக அளவில் சாதனை படைக்கும் தனுஷ் & யோகிபாபு திரைப்படங்கள்!
உலக அளவில் இதுவரை வெளியான அனைத்து படங்களில் இருந்து மிகச்சிறந்த 25 படங்களை பிரபல ஆங்கில இணையதளமான லெட்டர் பாக்ஸ் வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியாவைச் சேர்ந்த 5 படங்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளன. அதில் தமிழில் கர்ணனும், யோகிபாபு நடித்த மண்டேலாவும் அடக்கம். மலையாளத்தில் மூன்று படங்கள் இடம் பிடித்துள்ளன.


"தி கிரேட் இந்தியன் கிச்சன்" (மலையாளம்) - 5 வது இடத்தையும், "கர்ணன்" 10வது இடத்தையும், பகத் பாசில் நடித்த "ஜோஜி" (மலையாளம்) -12 வது இடத்தையும், "மண்டேலா" 17 வது இடத்தையும், நயாத்து (மலையாளம்) - 23 வது இடத்தையும் பிடித்துள்ளன.
முதல் இடத்தை பிலிப்பைன்ஸ் திரைப்படமான கிளினர்ஸ் பெற்றுள்ளது. வரக்கூடிய காலங்களில் நல்ல படைப்புகள் தமிழிலிலும், பிற இந்திய மொழிகளிலும் உருவாகும்
பொழுது இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என நம்பலாம்.