அண்ணன் குழந்தைகளுடன் நடிகர் தனுஷ் - வைரலாகும் புகைப்படம்
தனது அண்ணன் குழந்தைகளுடன் நடிகர் தனுஷ் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை உள்ள திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
தமிழில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாறன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளளது. இதையடுத்து திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட தமிழ் படங்களையும், வாத்தி, சேகர் கம்முலா இயக்கத்தில் என தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். இதுதவிர இந்தி இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார்.
இதற்கிடையே கடந்த 2004-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து நடிகர் தனுஷ் திருமணம் செய்துக்கொண்டார்.
18 ஆண்டுகளாக நட்சத்திர தம்பதிகளாக ஜொலித்து வந்த இவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரிவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.
இவர்களுக்கு யாத்ரா ராஜா மற்றும் லிங்கா ராஜா என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் தெலுங்கில் உருவாகும் ‘வாத்தி’ படத்தில் பிசியாக நடித்த வந்த தனுஷ், தனது அண்ணனான முன்னணி இயக்குனர் செல்வராகவனின் குழந்தைகளுடன் பொழுதை கழிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்திலும் வைரலாகி வருகிறது.
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil