செல்வராகவன் மகனை அள்ளிக்கொஞ்சும் சித்தப்பா தனுஷ் - ரசிகர்கள் மகிழ்ச்சி

dhanush photo viral selvaragavan baby
By Anupriyamkumaresan Sep 04, 2021 10:08 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

தனது அண்ணன் செல்வராகவன் மகனை நடிகர் தனுஷ் அள்ளிக் கொஞ்சும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குநர் செல்வராகவன் காதல் கொண்டேன் படத்தில் தான் அறிமுகப்படுத்திய சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்பு இருவரும் கருத்து வேறுபாட்டால் விவாரகரத்து செய்துகொண்டனர்.

செல்வராகவன் மகனை அள்ளிக்கொஞ்சும் சித்தப்பா தனுஷ் - ரசிகர்கள் மகிழ்ச்சி | Dhanush With Selvaragavan Born Baby Photo Viral

இந்நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொண்டார் செல்வராகவன்.

ஏற்கெனவே, இந்தத் தம்பதிக்கு லீலாவதி என்ற மகனும் ஓம்கார் என்ற மகனும் உள்ள நிலையில் மூன்றாவது முறையாக கர்ப்பிணியாகியிருந்தார், கீதாஞ்சலி செல்வராகவன். மூன்று வாரங்களுக்கு முன் வயிறு பெரிதாக உள்ள தன்னுடையை படத்தை பகிர்ந்து கர்ப்பிணியாக உள்ளதை உறுதிப்படுத்தினார்.

செல்வராகவன் மகனை அள்ளிக்கொஞ்சும் சித்தப்பா தனுஷ் - ரசிகர்கள் மகிழ்ச்சி | Dhanush With Selvaragavan Born Baby Photo Viral

சமீபத்தில் மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது. ரிஷிகேஷ் என்று பெயரிட்டுள்ளனர். இந்த நிலையில், தனது அண்ணன் செல்வராகவன் மகனை தனுஷ் ஆசையுடன் அள்ளிக் கொஞ்சம் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், கீதாஞ்சலி செல்வராகவன்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.