‘2 அக்காவும் டாக்டர்ஸ், அண்ணன் இன்ஜினியர், தனுஷுக்கு சினிமாவுல சுத்தமா ஈடுபாடு இல்ல’ - தந்தை கஸ்தூரி ராஜா பேட்டி

Dhanush Kasthuri Raja
By Swetha Subash May 14, 2022 08:31 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவராக வலம் வரும் நடிகர் தனுஷ் சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவு பெற்றதை சமீபத்தில் கொண்டாடினார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் தனுஷ் குறித்து பேசியுள்ள அவரின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரி ராஜா, “சினிமாவில் நடிக்கற ஆர்வம் தனுஷுக்கு இல்லை. ஆரம்ப கட்டத்தில் அடுத்தடுத்து 5 படங்கள் நடித்த பிறகும் கூட, அவர் சினிமாவைவிட்டு ஒருகால் வெளியவே தான் வச்சிருந்தார்.

‘2 அக்காவும் டாக்டர்ஸ், அண்ணன் இன்ஜினியர், தனுஷுக்கு சினிமாவுல சுத்தமா ஈடுபாடு இல்ல’ - தந்தை கஸ்தூரி ராஜா பேட்டி | Dhanush Was Not Interested In Acting Says Father

ஒரு நாள் பள்ளிக்கூடத்திற்கு சென்ற அவரை ஒரு படத்தின் படப்பிடிப்புக்கு சென்றேன். அதற்கு தனுஷ் இங்கே ஏன் கூட்டிட்டு வந்தீங்க?-ன்னு கத்தினார். ஒரு பொண்ணு கையை பிடிச்சுட்டு பீச்சுல நடந்து போகற சீன் எடுக்கும் போது தனுஷுக்கு கை, காலெல்லாம் வெடவெடன்னு நடுங்கியது.

விடுமுறை நாட்களில் ஆரம்பிச்ச படம் 60 நாட்களில் எடுத்து முடிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் ரெண்டு விடுமுறை நாட்கள் போனபிறகும் படப்பிடிப்பு முடியவில்லை. பணப்பற்றாக்குறை ஏற்பட்டது. தனுஷின் படிப்பு போச்சு. அவரை 12- ம் வகுப்பிலிருந்து இருந்து நானே இழுத்துட்டு வந்துட்டேன்.

தனுஷின் அக்காக்கள் 2 பேரும் டாக்டர்ஸ் அண்ணன் செல்வராகவன் மெக்கானிக்கல் இன்ஜினியர், இதனால் ஒரு பயத்திலேயே அவர் தன்னை தானே நடிப்பில ஈடுபடுத்திக்கிட்டாரான்னு கூட எனக்குத் சில நேரம் தோணும். சினிமாவுக்குள்ள அவர் ஈடுபாடு இல்லாமல்தான் வந்தார்” என பேசியுள்ளார்.