தனுஷ் படத்தில் நடிக்க துளி கூட விருப்பம் இல்லை.... - விக்னேஷ் சிவன் ஓபன் டாக் - ஷாக்கான ரசிகர்கள்

Dhanush Vignesh Shivan
By Nandhini May 29, 2022 12:11 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அண்மையில் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது.

நடிகை நயன்தாரா கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பபேஷ்வரர் ஆலயத்தில் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார்.

சமீபத்தில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் தமிழகம் முழுவதும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனையடுத்து, நடிகர் அஜீத் நடிக்கவிருக்கும் ‘அஜித் 62’ படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் தற்போது விக்னேஷ் சிவன் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் விக்னேஷ் சிவன் பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

கடந்த 2014ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில், வேல்ராஜ் இயக்கத்தில் உருவான படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இப்படம் வெறும் ரூ.8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால், ரூ.53 கோடி வசூலை கொடுத்து ஹிட்டடித்தது.

இந்தப் படத்தில் விக்னேஷ் என்ற கேரக்டரில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நடித்திருந்தார்.

இது குறித்து அவர் பேட்டியில் கூறும்போது, ‘எனக்கு நடிப்பதில் பெரிதாக ஆர்வம் கிடையாது. விருப்பம் இல்லாமல் தான் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் நடித்தேன். உண்மையில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் அன்றைக்கு வரவில்லை. எனவே தனுஷ் என்னை அந்த ரோலில் நடிக்க வைத்தார்’ என்று கூறினார்.   

தனுஷ் படத்தில் நடிக்க துளி கூட விருப்பம் இல்லை.... - விக்னேஷ் சிவன் ஓபன் டாக் - ஷாக்கான ரசிகர்கள் | Dhanush Vigneshshivan