இல்லற வாழ்வில் மீண்டும் இணையும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்? - புதிய தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடி மீண்டும் இல்லற வாழ்வில் இணையவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என மகன்கள் உள்ள நிலையில் இருவரும் பிரிவதாக கடந்த மாதம் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு சறுக்கல் என்பது போல ஏதாவது ஒரு பின்னடைவால் சமாதான முயற்சி கைக்கூடாமல் போனது. இதனிடையே கடந்த 6 ஆண்டுகளில் தனுஷ் - ஐஸ்வர்யா இருவருக்குள்ளும் பிரச்னை வந்த போது அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி இருவரையும் ரஜினிகாந்த் சேர்த்து வைத்ததாக கூறப்பட்டது.
இந்த முறையும் அப்படியான முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில் மகன்களுக்காக மீண்டும் தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடி இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரஜினி, தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.