திருநெல்வேலியில் சொமேட்டோ, ஸ்விகி டெலிவரி பாய்களுக்கு இலவச பெட்ரோல் வழங்கிய தனுஷ் ரசிகர்கள்...!
திருநெல்வேலியில் சொமேட்டோ, ஸ்விகி டெலிவரி பாய்களுக்கு இலவச பெட்ரோலை தனுஷ் ரசிகர்கள் வழங்கினர்.
நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் திரைப்படங்களில் நடிகனாக நடித்து அறிமுகமாகி தற்போது பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல பிரிவுகளில் பணியாற்றி புகழ் பெற்றுள்ளார்.
‘திருச்சிற்றம்பலம்’ படம்
தற்போது, தனுஷ் மித்திரன் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்துள்ளார். திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர் .
5 ஆண்டுகள் கழித்து இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை வெளியாக உள்ளது. இப்படத்தில் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார்.
சமீபத்தில், நடிகர் தனுஷ் இப்படத்தை படக்குழுவினருடன் பார்த்தார். இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியானது.
இலவச பெட்ரோல்
இந்நிலையில், உணவு டெலிவரி பாயாக திருச்சிற்றம்பலம் படத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள நிலையில், நாளை திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு திருநெல்வேலியில், சொமேட்டோ, ஸ்விகி டெலிவரி செய்யும் நபர்களுக்கு தனுஷ் ரசிகர் மன்றத்தினர் இலவசமாக பெட்ரோல் வழங்கி வருகிறார்கள்.
இது குறித்து தனுஷ் ரசிகர் மன்றத்திலிருந்து ஒருவர் கூறுகையில், தனுஷ் நடிப்பில் நாளை திருச்சிற்றம்பலம் படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் தனுஷ் உணவு டெலிவரி பாயாக நடித்துள்ளார்.
உணவு டெலிவரி பாய் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை இப்படத்தில் தனுஷ் வெளிப்படுத்தியுள்ளார். இதனால், சொமேட்டோ, ஸ்விகி டெலிவரி செய்யும் நபர்களுக்கு தனுஷ் ரசிகர் மன்றம் சார்பாக இலவசமாக பெட்ரோல் வழங்கி வருகிறோம் என்றார்.