என்ன நான் மட்டும் தானா ? வேற யாருமே செஞ்சது இல்லையா : தனுஷ்
நடிகர் தனுஷ் கடந்த மாதம் அவர் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தார். காதலித்து திருமணம் செய்த இவர்களின் பிரிவை பற்றிய செய்தி தற்போதுவரை சினிமாதுறையில் பேசு பொருளாக உள்ளது..
காதலித்து திருமணம் செய்த இவர்களின் பிரிவிற்கு ஒவ்வொருவரும் பல காரணங்களை கூற குடும்பத்தில் இந்த பிரிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தனுஷ் ஐஸ்வர்யா இருவருக்கும் யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ளனர் . ஆகவே நலனை கருத்தில் கொண்டு இருவரும் மீண்டும் சேரவேண்டும் என இவர்கள் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர் .
இந்த சூழ்நிலையில் ரஜினியின் வருத்தம் ஐஸ்வர்யாவின் மனதை சற்று மாற்றியிருப்பதாகவே தெரிகிறது. தன் அப்பாவின் கோபத்தை தணிக்க மீண்டும் தனுஷுடன் ஐஸ்வர்யா சேர்ந்து வாழ விருப்பம் தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் தனுஷ் பிடிவாதமாக தன் முடிவை மாற்றிக்கொள்ளுமாறு இல்லை எனவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு தனுஷ் கூறும் கருத்து என்னவென்றால் சினிமா துறையில் நடிக்கும் நடிகர், நடிகைகள் அனைவரும் தான் அனைவரிடமும் சகஜமாக பழகுவார்கள்.
அதற்காக எல்லாவற்றையும் பிரச்சனையாக எடுத்தால் எப்படி ? என தனுஷ் தன் பக்கம் இருக்கும் நியாயத்தை தனது நெருங்கிய வட்டாரங்களிடம் பகிர்ந்து வருவதாக கூறப்படுகிறது.