'என்னை உங்களால் தடுக்கவே முடியாது அத்தை' - மீண்டும் லதா ரஜினிகாந்த்தை சீண்டிய தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் திருமணம் ஆகி 18 ஆண்டுகளுக்கு பிறகு பிரிவதாக அறிவித்தனர். அவர்களின் அறிவிப்பு திரைவட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவர்களின் பிரிவுக்கு என்ன காரணம் என இதுவரை அறியப்படாத நிலையில் இணையத்தில் பல்வேறு விதமான கருத்துக்கள் உலா வந்த வண்ணம் உள்ளது.
இதையடுத்து தனது மகளுடன் சேர்ந்து வாழ தயாராக இல்லாத தனுஷின் கெரியரை காலி செய்ய வேண்டும் என்று லதா ரஜினிகாந்த் மும்முரமாக ஈடுபட்டு வந்தார்.
திரை உலகின் முக்கிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடம் தனுஷை வைத்து படம் இயக்கக்கூடாது என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனுஷை தேடி பெரிய பட வாய்ப்பு வந்திருக்கிறது. கொரடலா சிவா இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கிறார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பான் இந்திய படமாக இந்த படம் உருவாக இருப்பதால் நடிகர் தனுஷ் மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.
மேலும், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மற்றொரு படமும் பான் இந்திய படம் தானாம். அந்த படத்திற்கு கேப்டன் மில்லர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் டபுள் ஹாப்பியாம். இது தவிர இரண்டு பாலிவுட் படங்களிலும் தனுஷ் நடிக்கிறார். அதில் ஒன்று மெகா பட்ஜெட் படமாகும்.
மகளுடன் வாழ மறுத்த தனுஷின் கெரியரை காலி செய்துவிட வேண்டும் என லதா எண்ணி வந்த நிலையில் தனுஷை தேடி அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தவண்ணம் இருப்பதை பார்த்து அனைவரும் லதாவால் தனுஷை ஒன்றும் செய்யமுடியவில்லை என்பது போல் பேசி வருவதாக கூறப்படுகிறது.
தனக்கு எதிராக லதா ரஜினிகாந்த் எடுத்துவைத்த அனைத்து முயற்சிகளையும் முறியடித்த தனுஷ் என் வளர்ச்சியை உங்களால் தடுக்கவே முடியாது அத்தை என்பது போல் இருக்கிறாராம்.