தனுஷூடன் இருக்கும் பெண் யார்? - புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்
நடிகர் தனுஷூடன் பெண் ஒருவர் உணவருந்தும் புகைப்படம் வைரலான நிலையில் ரசிகர்களிடையே எழுந்த குழப்பத்திற்கு விடை கிடைத்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 18 ஆண்டுகள் கழிந்த நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக சமூக வலைத்தளங்களில் கடந்த மாதம் அறிவித்தனர்.
இருவரையும் இணைக்க இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் விவாகரத்து தொடர்ந்து ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து மீள தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களது திரையுலக பணிகளில் பிசியாக உள்ளனர்.
Tamil Super Star @dhanushkraja visited Hyderabad 's Famous restaurant @1980smilitary today for lunch. #SIR #Dhanush pic.twitter.com/u9c1vcIdnE
— VamsiShekar (@UrsVamsiShekar) February 16, 2022
செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்ட தனுஷ் மூத்த மகன் யாத்ராவுடன் இருக்கும் புகைப்படம் நேற்று இணையத்தில் வைரலான நிலையில் ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவருடன் அவர் உணவருந்தும் புகைப்படமும் வெளியானது.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த பெண் யார் என கேள்வி கேட்க அதற்கு விடை கிடைத்துள்ளது. ஆடை வடிவமைப்பாளரான அவர் தனுஷின் பல படங்களுக்கு அவருக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். நானே வருவேன் மற்றும் வாத்தி ஆகிய படங்கள் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் அந்த பெண்ணும் படப்பிடிப்பிற்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.