மகனிடம் கொஞ்சி பேசும் தனுஷ் - வைரலாகும் புகைப்படம் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்

dhanush viral-photo தனுஷ் son-yatra யாத்ரா
By Nandhini Feb 16, 2022 11:28 AM GMT
Report

சமீபத்தில் நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக சமூகவலைத்தளங்களில் அறிவித்தனர். இதனால், ரசிகர்கள், பிரபலங்கள் என ஒட்டுமொத்த சினிமாத்துறையும் அதிர்ச்சியில் ஆழ்ந்து போனது.

இவர்களின் விவாகரத்து அறிவிப்பால் நடிகர் ரஜினிகாந்த் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். அப்பாவின் கோபம் கண்டு ஐஸ்வர்யா மனம் மாறி தனுஷுடன் சேர்ந்து வாழ்வதாக கூறியதாக தகவல்கள் வெளியானது. இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் குடும்பத்தினர், நண்பர்கள் இருவரிடமும் பேசி வருகின்றனர்.

இந்நிலையில், தனுஷ் அவரின் மகன் யாத்ராவுடன் உள்ள புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் நடிகர் தனுஷ் யாத்ராவிடம் கொஞ்சி பேசிக்கொண்டிருக்கிறார்.

இதைப் பார்த்த தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திழைத்துள்ளனர். தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில வைரலாகி வருகிறது.