விரைவில் ஹீரோவாக தனுஷின் மகன்? அதுவும் அப்பாவின் இயக்கத்தில்
நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் நடிகர் தனுஷ்.
நடிகராக மட்டுமின்றி இயக்குனராக வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார், இவரது இயக்கத்தில் 2017ம் ஆண்டு வெளியான பா.பாண்டி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து ரயான், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படங்களை இயக்கியிருந்தார்.
ஹீரோவாக யாத்ரா?
தற்போது புது செய்தி என்னவென்றால் மூத்த மகன் யாத்ராவை ஹீரோவாக களமிறக்கவுள்ளாராம் தனுஷ்.
அந்த படத்தை தானே இயக்கி தன்னுடைய தயாரிப்பு நிறுவனமே தயாரிக்கவுள்ளதாம்.

இளைஞர்களை காதல் கதையை மையமாக வைத்து நகைச்சுவை கலந்த படமாக உருவாகலாம் என பேசப்படுகிறது.
ஏற்கனவே Golden Sparrow பாடலில் பாடலாசிரியராக முத்திரை பதித்துள்ள யாத்ரா, ஒளிப்பதிவு பற்றியும் கற்றுக்கொண்டதாக பேசப்பட்டது.
தந்தையின் பாணியில்
துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் அவரது தந்தை கஸ்தூரி ராஜா.
அவரது பாணியில் அடுத்த தலைமுறையை சினிமாவில் களமிறக்கவுள்ளார் தனுஷ்.
ராஜ்குமார் பெரியசாமி மற்றும் விக்னேஷ் ராஜா படங்களை முடித்த பின்னர் யாத்ரா படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
