விரைவில் தனுஷின் அரசியல் பயணம்! கட்சியை பதிவு செய்தாரா?

Dhanush
By Fathima Oct 07, 2026 04:14 AM GMT
Report

நடிகர் தனுஷ் தன்னுடைய கட்சியின் பெயரை விரைவில் அறிவிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2024ம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், 2026 சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்கி 108 தொகுதிகளை வென்று முதலமைச்சராகி விட்டார்.

இவரது வெற்றி திரைப்பிரபலங்கள் பலருக்கும் அரசியல் ஆசையை தூண்டிவிட்டுள்ளதாகவும், பலரும் அரசியலில் களமிறங்க முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

விரைவில் தனுஷின் அரசியல் பயணம்! கட்சியை பதிவு செய்தாரா? | Dhanush Set To Enter Politics

இதில் நடிகர் தனுஷின் மீது அனைவரின் கவனமும் இருந்து வரும் நிலையில் புதிய அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் அவர் பதிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் கூட தனது ரசிகர் மன்றத்தை மாவட்ட ரீதியாக பிரித்து மாவட்ட தலைவர்களை தனுஷ் நியமித்திருந்தார், உறுப்பினர் சேர்க்கையும் நடந்து வரும் நிலையில் விரைவில் கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.

கட்சியின் கொடி, கொள்கைகள், கோட்பாடுகள் குறித்தும் அறிவிப்பு வெளியாகலாம், 2031ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.]

விரைவில் தனுஷின் அரசியல் பயணம்! கட்சியை பதிவு செய்தாரா? | Dhanush Set To Enter Politics