கடனுக்கு பயந்து ஊரை விட்டு ஓட இருந்த தனுஷ் குடும்பம்... - வெளியான தகவல்... ஷாக்கான ரசிகர்கள்...!
கடன் தொல்லைக்கு பயந்து சொந்த ஊருக்கு ஓட இருந்த தனுஷ் குடும்பம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் திரைப்படங்களில் நடிகனாக நடித்து அறிமுகமாகி தற்போது பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல பிரிவுகளில் பணியாற்றி புகழ் பெற்றுள்ளார். தனுஷ் இந்திய சினிமாவை தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
ஊரை விட்டு ஓட இருந்த தனுஷ் குடும்பம்
இந்நிலையில், தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா குறித்த ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில், இயக்குனர் விசுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்தான் தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா. இவர் நடிகர் ராஜ்கிரனால் இயக்குனரானார்.
ஒருகட்டத்தில் தான் இயக்கும் படங்களை அவரே தயாரிக்க தொடங்கினார். அப்போது, படங்களை தயாரிக்கும்போது தொடர்ந்து அவருக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. கடன்காரர்கள் பணத்தை கேட்டு அவரை தொல்லை கொடுக்கவே, அவர்களுக்கு பயந்து இனிமேல் சென்னையில் இருக்க வேண்டாம் என்று சொந்த ஊரான தேனிக்கு சென்றுவிடலாம் என்று அவர் முடிவெடுத்துள்ளார்.
அப்போது, குடும்பத்தினரிடம் இதைப் பற்றி பேசும்போது, மனவேதனையில் இருந்த தந்தையிடம் சென்ற செல்வராகவன், எனக்கு ஒரு 40 லட்சம் ரெடி பண்ணி கொடுங்க.. அதை வைத்து நான் ஒரு படம் எடுக்கிறேன்.என் கதை மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு. கண்டிப்பா வெற்றிபெறும் என்று கூறியுள்ளார். துவக்கத்தில் தயங்கிய கஸ்தூரி ராஜா அவருக்கு சொந்தமாக இருந்த ஒரு வீட்டை விற்று அந்த பணத்தை கொடுத்திருக்கிறார். அதுதான் கஸ்தூரிராஜாவிடம் இருந்த கடைசி சொத்து.
அந்தப் பணத்தில் உருவானதுதான் ‘துள்ளுவதோ இளமை’ படம். இப்படத்தில் யார் ஹீரோ என்று கஸ்தூரி ராஜா கேட்க, தனுஷ்தான் என்று செல்வராகவன் கூறியிருக்கிறார். இதைக் கேட்டதும், அப்படியே கஸ்தூரிராஜா ஷாக்காகிவிட்டார்.
சினிமாவுக்காக வெங்கட் பிரபு என்ற பெயரை, ‘தனுஷ்’ என்று மாற்றி வைத்து விட்டார் செல்வராகவன். இப்படத்தில் சர்ச்சையான காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும் கஸ்தூரி ராஜாவுக்கு நல்ல லாபத்தை பெற்று தந்தது இப்படம்.
தன் பிறகு தனுஷ் நடித்த ‘காதல் கொண்டேன்’, ‘திருடா திருடி’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, கஸ்தூரி ராஜாவின் வாழ்க்கையே மாறிவிட்டது.