தனுஷ் முடிவு பண்ணிட்டா அது தான் இறுதி முடிவு... - ரகசியத்தை சொன்ன செல்வராகவன்...!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் திரைப்படங்களில் நடிகனாக நடித்து அறிமுகமாகி தற்போது பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல பிரிவுகளில் பணியாற்றி புகழ் பெற்றுள்ளார். தனுஷ் இந்திய சினிமாவை தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
சாதனைப் படைத்த தனுஷ்
கடந்த 2022ம் ஆண்டிற்கான ஐஎம்டிபியின் மிக பிரபலமான இந்திய நடிகர்களின் பட்டியலில், முதல் இடத்தை நடிகர் தனுஷ் பிடித்து சாதனைப் படைத்தார். 2-வது இடத்தில் ஆலியா பட்டும், 3வது இடத்தில் ஐஸ்வர்யா ராய், 5-வது இடத்தில் சமந்தாவும் 9 மற்றும் 10வது இடத்தில் அல்லு அர்ஜுனும், யஷ்ஷும் இடம் பிடித்தனர்.
சமீபத்தில் தனுஷ் நடிப்பில் ‘வாத்தி’ படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ரகசியத்தை சொன்ன செல்வராகவன்
சமீபத்தில், ஒரு சேனலுக்கு செல்வராகவன் பேட்டி கொடுத்த போது, தனுஷ் குறித்து சில தகவல்களை கூறினார்.
அந்த பேட்டியில் பேசுகையில்,
நான் நடிகை சோனியா அகர்வாலை முதலில் திருமணம் செய்தேன். ஆனால் கொஞ்ச நாளிலேயே எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்தானது. அந்த சமயத்தில் தனுஷ் என்னிடம் வந்து, ‘இத்தோடு ஓடிரு, இனிமேல் இந்த தப்பை பண்ணாதே, ஆண்டவன் உனக்கு ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்திருக்கிறான். எப்பொழுதும் சிங்கிளாவே இரு அதான் நல்லது என்று கூறினார்.
தற்போது இது குறித்த தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த தனுஷ் ரசிகர்கள்... அண்ணனுக்கே இந்த அறிவுரை என்றால் தான் மட்டும் கடைபிடிக்க மாட்டாரா என்ன? ஆகவே தனுஷ் காலம் முழுவதும் சிங்கிளா இருக்கத்தான் ஆசைப்படுகிறார் போல என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.