தனுஷ் ரூட்டை ஃபாலோ பண்ணும் செல்வராகவன் - ஷாக்கான ரசிகர்கள்

movie dhanush SelvaRaghavan SaaniKaayidham
By Nandhini Feb 16, 2022 05:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக இருப்பவர் செல்வராகவன். இவர் படத்திற்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், முதன்முதலாக செல்வராகவன் 'சாணிக் காயிதம்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

கடந்த 2020ம் ஆண்டே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு, கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்தப்படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. ஓடிடி தளத்தில் வரும் மார்ச் மாதம் ‘சாணிக் காயிதம்’ படம் வெளியாக இருப்பதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தனுஷின் 'மாறன்' படமும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்நிலையில், செல்வராகவன் ஹீரோவாக நடித்துள்ள முதல் படமும் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதால் ரசிகர்களிடைய மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.