என்னை இயக்குவது யார்? ஓம் பட விழாவில் தனுஷ் விளக்கம்

Dhanush
By Karthikraja Nov 07, 2026 05:49 AM GMT
Report

dhanush says god is directing me: ஓம் பட விழாவில் பேசிய நடிகர் தனுஷ், தன்னை இறைவன்தான் இயக்குவதாக தெரிவித்துள்ளார்.

தனுஷின் அரசியல் வருகை

நடிகர் தனுஷ் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபடுவதற்கான முயற்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷ் கட்சி தொடங்குவது உறுதி என அவருடைய நண்பர்கள் மூலமாக தகவல் கிடைத்தது என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார். 

என்னை இயக்குவது யார்? ஓம் பட விழாவில் தனுஷ் விளக்கம் | Dhanush Says God Is Directing Me

தனுஷ் டெல்லி சென்று வந்த நிலையில், அவரை பாஜக பின்னிருந்து இயக்குவதாக காங்கிரஸ் மற்றும் தவெக நிர்வாகிகள் விமர்சித்தனர்.

இந்நிலையில் நேற்று சென்னை தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஓம் பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தனுஷ் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

என்னை இயக்குவது இறைவன்

இதில் பேசிய அவர், "என்ன பேசலாம்? நம்ம என்ன பேசினாலும் எதுவாவது சொல்லுவாங்க. அதுக்காக நம்ம பேசாம இருக்க முடியாது. புதிதாக ஒன்று உருவாகும்போது அதிர்வுகள் இருக்கதான் செய்யும்.

அண்மைக் காலமாக எனது பெயரில் நிறைய வதந்திகள் பரவி வருகின்றன. என்னை இவர்கள் இயக்குகிறார்கள், என் பின்னால் அவர்கள் இருக்கிறார்கள் என பல செய்திகள் உலா வருகின்றன. என்னை இயக்குவது இறைவன், பின்னால் இருப்பது ரசிகர்கள், என் பக்கம் இருப்பவர்கள் மக்கள். 

என்னை இயக்குவது யார்? ஓம் பட விழாவில் தனுஷ் விளக்கம் | Dhanush Says God Is Directing Me

என்னுடைய பெயரில் பல்வேறு நற்பணிகளைச் செய்துவருகிறீர்கள். அதற்காக நான் எனது சொந்தப் பணத்தைக்கூடச் செலவிடுவதில்லை. இந்தச் சூழ்நிலையில், நான் ஒன்றை மட்டும் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

குடும்பத்தின் தேவைகளுக்குப் போக, உங்களிடம் கூடுதலாகப் பணம் இருந்தால் மட்டுமே இதுபோன்ற நற்பணிகளைச் செய்யுங்கள். உங்களது குடும்பம் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை இருக்கு. கடந்து போனால் மகிழ்ச்சி. அந்தச் சூழலில் பாதிக்கப்படும் மக்களுக்கு ரசிகர்கள் உதவ முன்வர வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக ஏசி டியூஷன் சென்டர்கள் அமைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அந்த திட்டத்தில் இருக்கிறோம். ஆனால் மொத்தமாகச் செய்துவிட முடியாது. உடனடியாகத் தொடங்கவும் முடியாது.

அடுத்த 10 முதல் 15 நாட்களுக்குள் சென்னையில் 3 இடங்களிலும், கன்னியாகுமரியில் ஒரு இடத்திலும் என முதற்கட்டமாக 4 ஏசி டியூஷன் சென்டர்கள் உறுதியாகத் தொடங்கப்படும். அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழகம் முழுக்க கொண்டு செல்ல திட்டமிடுவோம்" என தெரிவித்துள்ளார்.