காதலர் தினமான இன்று காதல் சங்கடத்தில் தனுஷ், சமந்தா - ரசிகர்கள் சோகம்
நடிகர் தனுஷும், நடிகை சமந்தாவும் காதலர் தினமான இன்று மிகவும் காதல் சங்கடத்தில் இருப்பார்களே என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தனது காதல் கணவரான நாக சைதன்யாவை விட்டு பிரிந்து நடிகை சமந்தா தனியாக இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி விவாகரத்து குறித்து அறிவிப்பை வெளியிட்டு பிரிந்தனர்.
தன்னுடைய கணவரை பிரிந்த நிலையில் சமந்தாவுக்கு இந்த நாள் மிகவும் சங்கடமான நாளாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கவலையோடு பதிவிட்டு வருகிறார்கள்.
அதேபோல், திருமணம் செய்து, கடந்த 18 வருடங்களாக காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் தனுஷும், ஐஸ்வர்யாவும். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த ஜனவரி 17ம் தேதி விவாகரத்து செய்து பிரிவதாக அறிவிப்பை வெளியிட்டனர். பிரிவுக்கு பிறகு வந்திருக்கும் முதல் காதலர் தினம் இது என்பது குறிப்பிடத்தக்கது.