தனுஷ், சமந்தா விவாகரத்துக்கு காரணம் “இந்த பிரபலம்” தான்? - ரசிகர்களின் பதில்
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா, நடிகை சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து விவகாரத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் நடிகர் நாகசைதன்யா - நடிகை சமந்தா தம்பதியினர் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் பிரிவதாக கடந்த மாதம் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யா சாய் பல்லவியுடன் சேர்ந்து லவ் ஸ்டோரி படத்தில் நடித்தார். அந்த படம் ரிலீஸான கையோடு சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிந்தார்கள்.
அதேசமயம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கும் நிலையில் தற்போது அவருக்கும் விவாகரத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் சேகர் கம்முலா ஒரு விவாகரத்து ஸ்பெஷலிஸ்ட் என்று கலாய்த்து வருகின்றனர்.