தனுஷ், சமந்தாவை தொடர்ந்து விவாகரத்துக்கு தயாராகும் பிரபல நடிகை? - ரசிகர்கள் அதிர்ச்சி
ஷாக்கான ரசிகர்கள் அண்மையில் தனுஷ், சமந்தா ஆகியோர் விவாகரத்து முடிவை அறிவித்த நிலையில், தற்போது மேலும் ஒரு நடிகை அந்த பட்டியலில் இணைய உள்ளார்.
நடிகை ஷில்பா ஷெட்டி பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். தமிழில் இவர் 'ரோமியோ', மற்றும் விஜய் நடித்த 'குஷி' படத்தில் நடித்திருக்கிறார்.
இவர் 2009ம் ஆண்டு லண்டனை சேர்ந்த ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்தார். ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்த்ரா ஓட்டல்கள், தங்க வர்த்தகம் என பல்வேறு துறைகளில் தொழிலதிபராக உள்ளார். இத்தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். சமீபத்தில் மும்பையில் ஆபாச செயலி மூலம் மாடல்களை ஆபாசமாக படம் எடுப்பதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் ராஜ் குந்த்ராவை கடந்த ஆண்டு கைது செய்தனர். சிறைக்குச் சென்ற ஒரு மாதத்தில் ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.
மிகவும் சந்தோஷமாகவும், குதூகலத்தோடு வாழ்ந்து வந்த ஷில்பா ஷெட்டியின் வாழ்க்கையில் இந்த விவகாரம் மிகப்பெரிய பூகம்பத்தையே ஏற்படுத்தி விட்டது. ராஜ் குந்த்ரா ஆபாச பட வழக்கில் சிக்கி சிறைக்கு சென்ற சமயத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விடுவார்கள் என்ற தகவலை ஷில்பா ஷெட்டி மறுத்து வந்தார். ஆனால், தற்போது மீண்டும் அதே விவாகரத்து சர்ச்சை கிளம்பி இருக்கிறது.
ராஜ்குந்த்ரா தனது பெயரில் உள்ள ரூ.39 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஷில்பா ஷெட்டியின் பெயருக்கு மாற்றி இருக்கிறார். இது தவிர கிணாரா பீச் அருகில் உள்ள பண்ணை வீட்டையும் அவர் ஷில்பா ஷெட்டியின் பெயருக்கு மாற்றி உள்ளார்.
இருவரும் பிரிந்து போகும் எண்ணத்துடனே இருப்பதால் தான் தற்போது சொத்து பிரிப்பு நடந்து வருவதாக பாலிவுட் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருக்கிறது.
You May Like This