ஒரு படம் ஹிட்டடித்ததும் டபுள் மடங்கு சம்பளத்தை உயர்த்திய தனுஷ்... - எத்தனை கோடின்னு தெரியுமா?
நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் திரைப்படங்களில் நடிகனாக நடித்து அறிமுகமாகி தற்போது பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல பிரிவுகளில் பணியாற்றி புகழ் பெற்றுள்ளார்.
தனுஷ் இந்திய சினிமாவை தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் பிரீமியர் ஷோ அமெரிக்காவில் நடந்த போது, செம்ம கெத்தாக மகன்களுடன் கோட்டு - சூட்டில் மாஸ் காட்டினார் நடிகர் தனுஷ்.
இதனையடுத்து, மும்பையில் நடந்த நிகழ்ச்சிக்கு அனைவருமே கோட்டு - சூட்டு வந்தனர். நடிகைகள் படு மாடர்ன் உடையில் வந்தனர்.
ஆனால், நடிகர் தனுஷ் மிகவும் எளிமையாக கதர் வேஷ்டி சட்டையில் வந்து அனைவரையும் மிரள வைத்தார். இதன் பின், நடைபெற்ற ‘தி கிரே மேன்’ பட புரோமோஷன் நிகழ்ச்சியில் வேஷ்டி-சட்டை அணிந்து வந்து அசத்தினார்.
தனுஷ் நடித்து வரும் படங்கள்
இந்நிலையில், நடிகர் தனுஷ் நடிப்பில், ‘வாத்தி’, ‘நானே வருவேன்’, ‘கேப்டன் மில்லர்’ போன்ற திரைப்படங்கள் தயாராகி வருகிறது. அதேபோல் ‘வட சென்னை’ மற்றும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.
இதில் ‘வாத்தி’, ‘நானே வருவேன்’ ஆகிய படங்கள் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன.
சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி தனுஷ்
தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் தயாராகி வருகிறார். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளார்.
இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கடந்த மாதமே இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க வேண்டும். ஆனால், இன்னும் தொடங்கப்படவில்லை.இதற்கு தனுஷ் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
தனுஷ் மித்திரன் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த மாதம் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி வெளியானது. 5 ஆண்டுகள் கழித்து இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத்.
இப்படத்திற்கு நடிகர் தனுஷ் ரூ.15 கோடி சம்பளமாக வாங்கி இருந்தார். இப்படம் ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இதனால், தன்னுடைய சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்தி உள்ளாராம் தனுஷ். ரூ.30 கோடி சம்பளம் வேண்டும் என்று தனுஷ் கேட்டதால், தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியடைந்தது. இதனையடுத்து, தயாரிப்பு நிறுவனம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.