வேணா..வலிக்குது..அழுதுருவேன்..தனுஷின் யூடியூப் பக்கம் முடக்கம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Dhanush Aishwarya Rajinikanth
By Thahir May 18, 2022 08:19 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ்.

நடிகர்,பாடகர்,பாடலாசிரியர்,இயக்குநர்,தயாரிப்பாளர் என்ற பன்முகத்திறமையை கொண்டவராக வலம் வருகிறார்.

வேணா..வலிக்குது..அழுதுருவேன்..தனுஷின் யூடியூப் பக்கம் முடக்கம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்..! | Dhanush S Youtube Page Freeze Fans Shocking

தனது 3 படத்தில் இடம்பெற்ற கொலவெறி டி என்ற பாடலின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். இதனிடையே அந்த பாடலில் பாடியும் இருந்தார்.இதற்கு காரணமாக அவரது மனைவியும் ஒருவராவர்.

இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருணம் செய்து கொண்டார்.

வேணா..வலிக்குது..அழுதுருவேன்..தனுஷின் யூடியூப் பக்கம் முடக்கம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்..! | Dhanush S Youtube Page Freeze Fans Shocking

18 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த இருவரும் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தனர்.

அதை அடுத்து நடிகர் தனுஷ் திரைபடங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். அண்மையில் வெளியான திரைப்படமான மாறன் எதிர்பார்த்த வெற்றி கொடுக்கவில்லை.

இதையடுத்து வெற்றி படத்தை எப்படியாவது கொடுத்து விட வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகிறார் தனுஷ்.

வேணா..வலிக்குது..அழுதுருவேன்..தனுஷின் யூடியூப் பக்கம் முடக்கம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்..! | Dhanush S Youtube Page Freeze Fans Shocking

இந்த நிலையில் நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்ட்டர்பார் பிலிம்ஸ்-ன் யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் மற்றும் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷுக்கு தொடர்ந்து திரும்பி பக்கமெல்லாம் வரும் பிரச்சனைகளால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.