கஷ்டப்படுத்தினது போதும்... அவங்க வந்தாங்கன்னா... ஓ.கே.ன்னு மட்டும் சொல்லாதீங்க... - தனுஷூக்கு கண்டிஷன் போட்ட ரசிகர்கள்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே, இயக்குநர் செல்வராகவன் உட்பல பலரும் நடித்துள்ள படம் “பீஸ்ட்”. நெல்சன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
குறிப்பாக படத்தில் லாஜிக் இல்லை என்றும், விஜய் என்ற ஒற்றை மனிதனுக்காக படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இணையத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதனிடையே ‘பீஸ்ட்’ படம் குறித்து இயக்குநரும், நடிகர் விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர், உலக அளவிலான தீவிரவாதிகள் - ரா ஏஜென்ட் போன்ற கனமான கதைக்களத்துடன் களமிறங்கும் போது முதலில் அதுதொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஹீரோ கிடைத்து விட்டார் என்பதற்காக இப்படியெல்லாம் எடுக்கக்கூடாது என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
பீஸ்ட் படத்தை பார்த்த ரஜினி, படம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும், ரஜினி நடிக்கும் Rajini - 169 படத்திற்கு இயக்குனர் மாற்றப்படலாம் என்று தகவல் வெளியானது.
ஆனால், இயக்குநரை மாற்றும் எண்ணம் எதுவும் சன் பிக்சர்ஸ் மற்றும் ரஜினிக்கு இல்லை என்றும், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலையில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் ரஜினி ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது.
இந்நிலையில், ரஜினியை அடுத்து தனுஷை வைத்து படம் இயக்க நெல்சன் முடிவு செய்துள்ளதாக தற்போது செய்தி வெளியாகி இருக்கிறது.
தனுஷை சந்தித்து ஒரு வரியில் கதை சொல்லியிருக்கிறாராம் இயக்குநர் நெல்சன். ஆனால் ஏற்கெனவே கை நிறைய படங்கள் வைத்திருப்பதால் நெல்சனுக்கு இன்னும் பதில் சொல்லாமல் உள்ளாராம் தனுஷ்.
இதை அறிந்த தனுஷ் ரசிகர்கள், அய்யோ.... அண்ணா... நெல்சன் படம் வேண்டாம்... அவர் விஜய்யை வைத்து சொதப்பியதே போதும்.... இந்நேரத்தில் நெல்சன் படத்தில் நடித்து ரிஸ்க் எடுக்க வேண்டாம்.. என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

கிரக மாற்றங்களால் நவம்பரில் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan