முதல்முறையாக ஐஸ்வர்யா இல்லாமல் வெளியான தனுஷின் குடும்ப புகைப்படம் - ரசிகர்கள் சோகம்

dhanush rajinikanth aishwaryadhanush Vaathi aishwaryarajinikanth NaaneVaruven dhanushkraja rockwithraajaa
By Petchi Avudaiappan Mar 19, 2022 12:33 AM GMT
Report

நடிகர் தனுஷ் இரு மகன்களோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என மகன்கள் உள்ள நிலையில் இருவரும் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தனர்.

இதனிடையே ஐஸ்வர்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முசாஃபிர் என்ற ஆல்பம் பாடலை இயக்கியுள்ளார். இந்த பாடல் நேற்று முன்தினம் மாலை வெளியானது. இதனை முன்னிட்டு யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

முதல்முறையாக ஐஸ்வர்யா இல்லாமல் வெளியான தனுஷின் குடும்ப புகைப்படம் - ரசிகர்கள் சோகம் | Dhanush Photo Viral With His Sons

அவர் தனது பதிவில், பயணி மியூசிக் வீடியோவிற்காக என் தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என குறிப்பிட்டிருந்தார். இதற்கு ஐஸ்வர்யா நன்றி தெரிவித்திருந்தார். 

ஆனால் முறைப்படி விவாகரத்து ஆகாத நிலையில் மனைவியை நண்பர் என குறிப்பிட்ட தனுஷின் செயலுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியான ராக் வித் ராஜாவில் தனது இரு மகன்கள் யாத்ரா, லிங்காவோடு தனுஷ் கலந்து கொண்டார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. முதல்முறையாக தனுஷின் குடும்ப புகைப்படத்தில் ஐஸ்வர்யா இல்லாதது தனுஷ் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.