மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் தனுஷ்...!
மீண்டும் படம் இயக்குவது எப்போது என நடிகர் தனுஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முக கலைஞராக திகழும் நடிகர் தனுஷ் பவர் பாண்டி என்னும் படத்தை இயக்கியுள்ளார்.
இதனிடையே தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று ஆன்லைனில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து டிவிட்டர் ஸ்பேசஸ் வாயிலாக நடிகர் தனுஷ் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

இதில் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் என 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது இயக்குனர் தனுஷை மீண்டும் எப்போது பார்க்கலாம் என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்குபதிலளித்த தனுஷ், இன்னும் சில ஆண்டுகளுக்கு திறமையான இயக்குனர்களின் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசை இருக்கிறது. அதனால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இயக்குனர் தனுஷை பார்க்க முடியாது என்று தெரிவித்தார்.