ஓடிடியில் வெளியாகும் தனுஷின் படம் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் படங்களில் ஒன்று ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் திரையரங்குகள் மூடப்பட ஓடிடி தளங்கள் மூலம் பல்வேறு திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இதனிடையே நடிகர் தனுஷ் தற்போது தமிழ், இந்தி, ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் நடித்து வருகிறார். இதில் ஹாலிவுட் படமான க்ரே மேனும், இந்திப் படம் அத்ரங்கி ரேயும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளன.
ராஞ்சனா படத்தின் மூலம் தனுஷை இந்தியில் அறிமுகப்படுத்திய ஆனந்த் எல்.ராய் அத்ரங்கி ரே படத்தை இயக்கியுள்ளார். அக்ஷய் குமார், சாரா அலிகான் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் அத்ரங்கி ரே திரைப்படத்தை ஓடிடியில் நேரடியாக வெளியிட நெட்பிளிக்ஸுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. தனுஷின் ஹாலிவுட் படம் க்ரே மேனும் ஓடிடியில்தான் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.