இனிமே தனுஷ் - ம் வாத்திதான் : தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது

dhanush vaathi movieposter
By Irumporai Dec 23, 2021 05:42 AM GMT
Report

தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய தெலுங்கு படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது. தனுஷ் தற்போது சினிமாவில் வெற்றிக் கோடி நாட்டி வருகிறார். ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை களம் கண்டுள்ள தனுஷ் தற்போது டோலிவுட்டிலும் களமிறங்குகிறார்.

இந்த நிலையில் தனுஷ் தெலுங்கில் அறிமுகமாகும் புதிய படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை தோழி பிரேமா', 'மிஸ்டர் மஜ்னு' உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தை சிதாரா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

படத்திற்கு வாத்தி என்று தமிழிலும் சார் என்று தெலுங்கிலும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள கல்வித் துறையில் உள்ள பிரச்சனைகள் அடிப்படையில் படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மோஷன் போஸ்டரில் பள்ளி வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் நடிகை சம்யுக்தா மேனன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை அடுத்து தனுஷ் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்திலும் தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.