அதிர்ச்சியில் உறைய வைத்த தனுஷ், நயன்தாரா - ஸ்தம்பித்த ரசிகர்கள்!
இந்த வருடம் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பட்டியலில் முக்கியமானவர்கள் தனுஷும், நயன்தாராவும்தான்..
தனுஷ்
பள்ளியில் படிக்கும் போதே தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் தனுஷ். தமிழ் சினிமாவின் முக்கிய முகமாக பார்க்கப்படும் ஹீரோக்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் பட்டியலில் வலம் வந்தவர், நடிகர் ரஜினிகாந்த் மகளை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து, ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் தனுஷ் திருமணமான தொடக்கத்தில் எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில், திடீரென இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.
நயன்தாரா
இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அதைபோலவே, இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து விக்னேஷ் இரு குழந்தைகளுடன் அவரும், நயன்தாராவும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து,
நயனும் நானும் அம்மா, அப்பாவாகிவிட்டோம். என திடீரென அறிவித்தார். ஜூன் மாதம் இருவருக்கும் திருமணமான சூழலில் எப்படி அக்டோபர் மாதமே குழந்தை பிறந்தது என பலரும் கேள்வி எழுப்பியவாறு இருந்தனர். அதன்பின் அவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றது தெரியவந்தது.
மேலும் 6 வருடத்திற்கு முன்பே பதிவு திருமணம் செய்ததாகவும் கூறப்பட்டது. இவ்வாறு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை அள்ளி தந்த வண்னம் இருந்தனர்.
அதன் அடிப்படையில், கோலிவுட்டையே அதிர வைத்த இரண்டு பேர்களில் தனுஷுக்கும், நயன்தாராவுக்கும் தான் முதல் இரண்டு இடங்கள் ஆகும்.