தனுஷ்- மிருணாள் தாகூர் திருமணம்? பரவும் வீடியோ
தனுஷ்- மிருணாள் தாகூர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டதாகவும் வீடியோ வெளியாகி வைரலாகிவருகிறது.
ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கிக்கொள்பவர் தனுஷ், விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வரும் தனுஷ்-க்கும், பாலிவுட் நடிகையான மிருணாள் தாகூருக்கும் இடையே காதல் என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்றெல்லாம் கூறப்பட்டது,

இந்நிலையில் கடந்த 22ம் திகதியே இருவருக்கும் ரகசியமாக திருமணம் நடந்து விட்டதாகவும், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் இன்ஸ்டாகிராம் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
பட்டு சேலை, பட்டு வேஷ்டியுடன் மணமக்கள் அமர்ந்திருக்க, த்ரிஷா, ஸ்ருதிஹாசன், விஜய், அஜித், அனிருத் என நட்சத்திர பட்டாளங்கள் இருக்கின்றனர்.
இதைப்பார்த்தாலே AI வீடியோ என்பது தெளிவாகிறது, இருவருக்கும் காதல் இருக்கிறதா இல்லையா என்பதை அவர்கள் கூறினால் மட்டுமே தெளிவாகும்.