தனுஷ் - மிருணாள் தாக்கூர் திருமணம்? உண்மை இதுதான்..
தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ்-மிருணாள் தாகூர்
மும்பையில் மிருணாள் தாகூர் நடித்த ‘SON OF SARDAR 2’ படத்தின் ப்ரீமியர் காட்சியில் சிறப்பு விருந்தினராக தனுஷ் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

தற்போது இருவரும் பிப்ரவரி மாதத்தில் திருமணம் செய்யவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த திருமணத்தில் இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகின்றனர்.
திருமணம்?
இந்நிலையில் இது தொடர்பாக தனுஷுக்கு நெருக்கமான பிரபல பாலிவுட் இயக்குநர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளதாக ஆங்கில செய்தி ஊடகம் தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி அந்த இயக்குநர், “இப்படியொரு திருமணம் நடைபெறுவதாக தனுஷ் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.
நாங்கள் தினமும் செல்போனில் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். யாருக்கும் தெரியாமல் அவர் எப்படி திருமணம் செய்துகொள்வார்?தனுஷை பொறுத்தவரை அவருக்கு 2-வது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லை.
தனுஷ் - மிருணாள் தாக்கூர் இருவருக்கும் ஒருவரையொருவர் பிடிக்கும். ஆனால் அது திருமணத்தில் முடியும் என சொல்ல முடியாது என என தெரிவித்துள்ளாராம். யார் அந்த இயக்குநர் என்பதும், அவர் பெயரும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.