மிருணாள் தாகூருடன் தனுஷ் டேட்டிங்? ரகசியம் சொன்ன நடிகை - வைரல் வீடியோ
நடிகை மிருணாள் தாகூர், நடிகர் தனுஷுடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
தனுஷ் - மிருணாள் தாகூர்
சீதா ராமம் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாகூர். இதுவரை எந்த கிசுகிசுக்களில் சிக்காத நடிகையாக இருந்தவர்.
இந்நிலையில், மிருணாள் தாஹூர் நடிப்பில் வெளியான சன் ஆஃப் சர்தார் 2 பட நிகழ்ச்சியில் சர்ப்ரைஸ் விசிட் தந்தார் தனுஷ். மிருணாள் தாஹூர் தனது பிறந்தநாளை மும்பையில் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் பார்ட்டியில் தனுஷூம் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
வைரல் வீடியோ
மேலும், மும்பையில் நடந்த சன் ஆஃப் சர்தார் 2 படத்தின் பிரிமீயர் நிகழ்ச்சியிலும் தனுஷ் விசிட் தந்ததோடு இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரலாகி வருகிறது.
Dhanush and Mrunal Thakur are dating? pic.twitter.com/ItWYJdsm8a
— Aryan (@Pokeamole_) August 3, 2025
தொடர்ந்து தனுஷ் கலந்துகொள்ளும் அனைத்து பார்ட்டிகளிலும் மிருணாள் தாஹூர் தவறாமல் கலந்துகொள்வது பேசுபொருளாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் ‘குபேரா’ திரைப்படம் வெளியானது. இதையடுத்து தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஈழத் தமிழர்களை மோசமாக சித்தரிக்கும் திரைப்படம் : தடைவிதிக்குமாறு பொங்கியெழும் வைகோ மற்றும் சீமான் IBC Tamil

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
