மனைவி ஐஸ்வர்யாவை நினைத்து ஏங்கும் நடிகர் தனுஷ்? - பாடல் வரிகளில் உருக்கம்..!
மனைவி ஐஸ்வர்யா நினைத்து தனது பாடல் வரிகள் மூலம் நடிகர் தனுஷ் ஏங்குகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பிசியாக இருந்து வரும் நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர தனுஷ். நடிப்பில் மட்டுமின்றி தாயரிப்பாளர்,இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்ட நடிகர் தனுஷ்.
செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், திரு்ச்சிற்றம்பலம், கேப்டன் மில்லர், டோலிவுட்டில் வாத்தி மற்றும் ஹாலிவுட்டில் தி கிரே மேன் என தொடர்ந்து படங்களில் பிசியாக இருந்து வருகிறார்.

தனுஷ் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்திற்கான கதை,வசனங்களை நடிகர் தனுஷே எழுதியுள்ளார்.
இப்படத்தில் நித்யா மேனன்,பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
ஐஸ்வர்யாவை நினைத்து ஏங்கும் நடிகர் தனுஷ்
திருச்சிற்றம்பலம் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.படத்தை தியேட்டரில் வெளியாக உள்ளது. இந்த நிலையில்,திருச்சிற்றம்பலம் படத்தின் இரண்டாவது சிங்கிள் மேகம் கருக்காதா என்னும் பாடல் வெளியாகியுள்ளது.

இந்த பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார்.இதன் வீடியோவில் தனுஷ் தனித்தனியாக நித்யா மேனன் & ராஷி கண்ணா ஆகியோர் நடனமாடி உள்ளதை போல காட்டப்பட்டுள்ளது.
தற்போது, இதில் இடம்பெற்றுள்ள ‘கால்கள் போன பாதை எல்லாம் நான் போகிறேன்’, ‘இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று கேட்கிறேன்’, ‘பழைய ரணங்கள் மறக்குதே’ போன்ற வரிகள் தனது மனைவியை நினைத்து ஏங்கி தனுஷ் எழுதியுள்ளாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan