‘முடிஞ்சா... என்ன நிறுத்து...’ தனுஷின் மாஸான காட்சியில் வெளியான ‘மாறன்’ பட டிரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

Movie Trailer dhanush Maran தனுஷ் மாறன் வெளியீடு Fans-happy படம் டிரெய்லர்
By Nandhini Mar 04, 2022 05:28 AM GMT
Report

தமிழ் சினிமாத்துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

கொரோனா பரவல் காரணத்தால், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘ஜகமே தந்திரம்’, ‘அத்ராங்கி ரே’ படங்கள் OTTயில் வெளியானது.

தற்போது, இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகை மாளவிகா மோகனன் நடித்த ‘மாறன்’ படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியானதால் ரசிகர்கள் அப்செட்டாகியுள்ளனர். என் தலைவனை நாங்கள் தியேட்டரில்தான் பார்க்க விரும்புகிறோம்..ஆதனால் ‘மாறன்’ படத்தை திரையரங்குகளில் வெளியிடுங்கள் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சமீபத்தில் ‘மாறன்’ படத்தில் இடம் பிடித்த தனுஷின் ‘ஏ.. இது பொல்லாத உலகம்..’ என்ற பாடல் சூப்பர் ஹிட்டடித்துள்ளது.  

இந்நிலையில், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ‘மாறன்’படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரில் மாஸான காட்சிகளில் நடிகர் தனுஷ் அசத்தியிருக்கிறார்.