தனுஷ் படத்தில் பிரச்சினையா? அதிரடியாக விலகிய பாடலாசிரியர் விவேக் - நடந்தது என்ன? ரசிகர்கள் ஷாக்

OTT vivek dhanush Songwriter தனுஷ் fan shocked Maran-Movie பாடலாசிரியர் விவேக்
By Nandhini Mar 05, 2022 08:39 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் தற்போது வெளியாக இருக்கும் படம் ‘மாறன்’. இப்படத்தில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். சமுத்திரகனி, காளி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன் உள்ளோட்டோர் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'மாறன்' படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தற்போது 'மாறன்' படத்தின் டிரெய்லர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டிரெய்லரைப் பார்த்த ரசிகர்கள், படத்தில் இடம்பெற்ற வசனங்கள் அருமையாக இருப்பதாக பாடலாசிரியர் விவேக்கிடம் கூறினார்கள்.

'மாறன்’ படத்தில் திரைக்கதை, வசனம் எழுத தான் முதலில் என்னை ஒப்பந்தம் செய்தார்கள். ஆனால், நான் அப்படத்திலிருந்து விலகி விட்டேன் என்றும், இப்படத்தில் உண்மையாக வசனம் எழுதியவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கிரியேட்டிவ் வேறுபாடுகள் காரணமாக நான் 'மாறன்' படத்தின் உரையாடல் மற்றும் திரைக்கதை எழுத்தாளரில் இருந்து விலகினேன். எனது முடிவை மதித்த குழுவிற்கு நன்றி. இன்று நான் உரையாடல் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருக்கிறேன். இதற்கு மாறன் தான் தொடக்கப் புள்ளி என்பதை எப்போதும் நினைவில் கொள்வேன்” என்று பதிவிட்டுள்ளார்.

படத்தின் டிரெய்லர் வெளியாகிய பின்னரே விவேக் படத்திலிருந்து விலகியது ரசிகர்கள் அனைவருக்கும் தெரியவந்துள்ளது. இந்தச் செய்தியால், ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.