இந்த வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்காதீங்க... சொல்லிட்டேன்... ப்ளீஸ்.. - தனுஷ் அதிரடி
கொரோனா வைரஸ் தொற்று பரவியதால், தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டன. இதனால், பல படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டு வந்தன. தற்போது கொரோனா குறைந்ததால், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். தியேட்டர்களும், மால்களும் திறக்கப்பட்டு விட்டன.
இந்நிலையில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகை மாளவிகா மோகனன் நடித்த ‘மாறன்’ படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதாக, டுவிட்டரில் எமோஜி வெளியிட்டனர்.
இதைப் பார்த்த நடிகர் தனுஷ் ரசிகர்கள், இது என்ன பெரிய உருட்டாக இருக்கிறது. தற்போது கொரோனா பிரச்சினையும் இல்லை. எல்லா தியேட்டர்களும் திறக்கப்பட்டுவிட்டன. ஆனால், ‘மாறன்’ படம் மட்டும் ஏன் ஓடிடியில்தான் வருமா என்று கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு கொதித்தெழுந்துள்ளனர்.
நாங்கள் எமோஜி கேட்டோமா, படத்தை தியேட்டரில் வெளியிடுங்க சார் என்று ரசிகர்கள் தங்களுடைய கருத்தை பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், இந்த பேச்சுக்கு தனுஷ் தரப்பிலிருந்து தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
அது என்னவென்றால், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘ஜகமே தந்திரம்’ படம் திரையரங்கில் வெளியாவதாகத்தான் இருந்தது. ஆனால், கொரோனாவால் அப்படம் OTTயில் வெளியானது. அதேபோல் தான் ‘அத்ராங்கி ரே’ படமும் OTT யில் வெளியானது.
‘மாறன்’ படம் OTTயில் வெளியாகக் கூடாது என்று தனுஷ் கேட்டுள்ளாராம்.
ஆனால், ‘மாறன்’ படத்தை பார்த்த தனுஷ் இப்படம் திரையில் வெளியானால் எதிர்பார்த்த வெற்றிபெறுமா என்ற சந்தேகத்தால் OTTயில் வெளியிடலாம் என்று தயாரிப்பாளரிடம் கூறியதாக ஒரு கருத்து உலா வந்துக் கொண்டிருக்கிறது.
என்ன இருந்தாலும், தனுஷ் ரசிகர்களுக்காக கட்டாயம் திரையில் ‘மாறன்’ படத்தை வெளியிடுவார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. இந்த செய்திக் கேட்ட அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.