ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து விவகாரம் : மீண்டும் வதந்தியை உண்மையாக்குவாரா தனுஷ்?

divorce dhanush aishwarya rajinikanth
By Irumporai Feb 07, 2022 10:53 AM GMT
Report

திருமணம் செய்து 18 ஆண்டுகள் கழித்து தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்துவிட்டார்கள். இந்நிலையில் அவர்கள் மீண்டும் சேரப் போவதாக ஒரு வதந்தி பரவிக் கொண்டிருக்கிறது.

முன்னதாக காதல் வதந்தியை உண்மையாக்க திருமணம் நடந்தது. தற்போது பரவும் வதந்தியை உண்மையாக்க தனுஷும், ஐஸ்வர்யாவும் சேர்வார்களா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைத்துவிட்டுத் தான் மறுவேலை என்று இருக்கிறாராம் ரஜினி. இரண்டு வளர்ந்த பிள்ளைகளை வைத்துக் கொண்டு உங்கள் சந்தோஷம் தான் முக்கியம் என்று இருக்காதீர்கள் என ரஜினி தெரிவித்தாக கூறப்படுகிறது.

தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜாவும் தன் மகனையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க முயன்று வருகிறாராம். அப்படி அவர் சமரச பேச்சுவார்த்தை நடத்தியபோது தான் தன் திருமண வாழ்க்கை எப்படிப்பட்டது என்று தனுஷ் சொன்னதாக கூறப்படுகிறது.

மகன் சொன்னதை கேட்ட கஸ்தூரி ராஜாவும், அவரின் மனைவியும் அழுதுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷும், சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளும் காதலிக்கிறார்கள் என்று வதந்தி தீயாக பரவிய நிலையில்.அந்த வதந்தி உண்மையானது.

இந்த நிலையில் தற்போது அவர்கள் மீண்டும் சேரப் போவதாக ஒரு வதந்தி பரவிக் கொண்டிருக்கிறது. முன்னதாக காதல் வதந்தியை உண்மையாக்க திருமணம் நடந்தது. தற்போது பரவும் வதந்தியை உண்மையாக்க தனுஷும், ஐஸ்வர்யாவும் சேர்வார்களா என்ற கேல்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது