சார்... உங்கள் மீது இன்னும் மரியாதை அதிகரிக்கிறது.... - பாராட்டிய தனுஷ்க்கு கவின் நெகிழ்ச்சி டுவிட்...!
உங்கள் மீது இன்னும் மரியாதை அதிகரிக்கிறது என்று டாடா படம் பார்த்து பாராட்டிய தனுஷ்க்கு கவின் நெகிழ்ச்சி டுவிட் செய்துள்ளார்.
நடிகர் கவின்
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மிகவும் பிரபலடைந்தார் நடிகர் கவின். இவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இலங்கைப் பெண் லாஸ்லியா மீது காதல் வயப்பட்டு பல பிரச்சினைகளை சந்தித்தார். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இருவரும் பிரிந்துவிட்டதாக பல தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாயின.
எமோஷனல் கடிதம் எழுதிய நடிகை
இதனையடுத்து, பிக்பாஸ் கவின் நடிப்பில் வெளியான படம் ‘லிப்ட்’. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு அடுத்ததாக தற்போது நடித்துள்ள படம் ‘டாடா’. இப்படத்தில், கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்துள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இப்படத்தை தமிழகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. படத்திற்கு கிடைத்துள்ள நல்ல வரவேற்பால் மகிழ்ச்சியடைந்த நடிகை அபர்ணா தாஸ் சமீபத்தில் உணர்ச்சிபூர்வமான கடிதம் ஒன்றை நடிகர் கவினுக்காக எழுதினார்.

பாராட்டிய தனுஷ்க்கு கவின் நெகிழ்ச்சி டுவிட்
இந்நிலையில், நடிகர் கவின் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சி டுவிட் செய்துள்ளார்.
அதில், ‘டாடா’ படம் பார்த்துவிட்டு தனுஷ் எனக்கு போன் செய்தார். இது எனக்கு கனவு போல் உள்ளது. நிங்கள் நடித்த படங்களை திரையில் பார்த்து நான் வியந்துள்ளேன். இன்று என் படத்தை பார்த்து விட்டு நீங்களே அழைத்து பேசினீர்கள்.
‘நன்றி’ என்ற வார்த்தை போதுமானதாக இருக்காது. வளர்ந்து வரும் நடிகர்களை பாராட்டுவது, உங்கள் மீதான மரியாதையை அதிகரிக்கிறது. சிறந்த படைப்புகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் என்று நெகிழ்ச்சியில் டுவிட் செய்துள்ளார்.
A fine moment to cherish forever :)
— Kavin (@Kavin_m_0431) February 21, 2023
Thanks a lot @dhanushkraja sir ??♥️ pic.twitter.com/XDqI9HV1jh
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து! கடலில் தத்தளித்த பயணிகள் பத்திரமாக மீட்பு IBC Tamil