தனுஷை கண்டு அலறும் பிரபல பாலிவுட் நடிகை - வெளியான தகவல் - ஷாக்கான ரசிகர்கள்
நடிகர் தனுஷ், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல முகம் கொண்டவர். இவர் தொடர்ந்து வரிசையாக பல படங்கள் நடித்து வருகிறார்.
சமீபத்தில், நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து, தொடர்ந்து ஐஸ்வர்யா, தனுஷ் பற்றிய தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், தற்போது, சமூகவலைத்தளங்களில் தனுஷ் குறித்த ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூரிடம் தனுஷுடன் இணைந்து நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அப்போது, தனுஷ் பெயரை கேட்டதும், அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று பட்டென்று தெரிவித்துவிட்டாராம்.
இதற்கு முன்பு, ஜான்வி கபூரை தனுஷ் மற்றும் அக்க்ஷய்குமார் நடிப்பில் வெளியான ‘அத்ராங்கி ரே’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க படக்குழுவினர் நெருங்கியுள்ளனர்.
ஆனால், அதற்கும் ஜான்வி மறுப்பு தெரிவித்து விட்டாராம். ஒவ்வொருமுறையும் தனுஷூடன் நடிக்க ஜான்வி மறுத்து வருவதால் சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.