Friday, Apr 4, 2025

தனுஷும், ஐஸ்வர்யாவும் பேசிட்டு தான் இருக்காங்க : உண்மை உடைக்கும் பிரபலம்

Dhanush Aishwarya Rajinikanth
By Irumporai 2 years ago
Report

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக உள்ள தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் 18 வருடங்கள் வாழ்ந்த நிலையில் யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள்.

தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து 

ஆனால் திடீரென தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து பெற்று பிரிய போவதாக அறிவித்துவிட்டனர். அண்மையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியதாக தகவல் வெளியாகியது.

இதையடுத்து அது வதந்தி என கூறப்பட்டது. இதன் காரணமாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எப்போது மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

தனுஷும், ஐஸ்வர்யாவும் பேசிட்டு தான் இருக்காங்க : உண்மை உடைக்கும் பிரபலம் | Dhanush Ishwarya Rajinikanth Speech

உண்மை உடைக்கும் பிரபலம்

இந்நிலையில் தனுஷின் நெருங்கிய நண்பரும் டைரக்டருமான சுப்ரமணியம் சிவா, தனுஷ்-ஐஸ்வர்யா பற்றி தன்னிடம் கூறியதாக ஒரு தகவலை தெரிவித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

அதாவது, தனுஷும்-ஐஸ்வர்யாவும் தற்போது தான் பிரிந்து இருக்கின்றனர். நிரந்தரமாக அவர்கள் பிரிய மாட்டார்கள். அதுமட்டுமின்றி தேவைப்படும் போது ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர் என சுப்ரமணியம் சிவா தன்னிடம் கூறியதாக பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தற்போது ஐஸ்வர்யா-தனுஷ் பற்றி வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.