தயங்கிய தனுஷ்...பிடிவாதமாக இருந்த ஐஸ்வர்யா..உடைந்த காதல் உருவான கதை..!!
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தற்போது பிரிந்து தனி தனியே வாழ்த்து வருகின்றனர்.
தனுஷ்
தமிழ் திரையுலகில் அறிமுகமான இரண்டாவது படத்திலேயே அனைவரது கவனத்தையும் திரும்பியவர் தனுஷ். ஆரம்பக்கட்டத்தில் உருவக்கேலிக்கு ஆளாகினாலும், பின்னர் அநேக ரசிகர்களை தனக்கென உருவாக்கி தற்போது தமிழ் மட்டுமின்றி இந்திய திரை உலகிலேயே முக்கிய நட்சத்திரமாக திகழ்கிறார் தனுஷ்.
இவரது திருமணம் 18 ஆண்டுகள் கழித்து முறிந்தாலும், ஐஸ்வர்யா மற்றும் தனுஷின் காதல் கதை பலரும் அறிந்திடாத ஒன்றே. கடந்த 2004-ஆம் ஆண்டு தன்னுடைய 23 வயதில் தனுஷ் ஐஸ்வர்யாவை திருமண செய்து கொண்டார்.
ஐஸ்வர்யாவின் பிடிவாதம்
தனது அக்காவின் தோழியான ஐஸ்வர்யாவை முதலில் காதலிக்க தயக்கம் காட்டியுள்ளார் தனுஷ். நடிக்க துவங்கிய புதிதிலேயே, தனுஷ் மீது ஈர்ப்பு ஏற்பட இருவரை பற்றி தொடர்ந்து செய்திகள் வெளிவர துவங்கின,. இருப்பினும் அவற்றை முழுமையாக அப்போது தனுஷ் மறுத்திருந்தார்.
ரஜினி உச்ச நட்சத்திரமாக விளங்கிய காலகட்டத்தில், அவருக்கு ஏற்பட்ட தயக்கத்தையும் தனது பிடிவாதத்தால் உடைத்து தன்னை விட வயது குறைந்த தனுஷ் திருமண செய்து கொண்டார் ஐஸ்வர்யா. காதலித்து பிடிவாதமாக திருமண செய்து கொண்ட இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் என்பது வேதனைக்குரிய விஷயமே.