மனைவி, மாமியாரை கடுப்பேத்த தான் தனுஷ் அப்படி செய்தாரா - பரவும் தகவல்!
ஐஸ்வர்யா மற்றும் மாமியார் லதா ரஜினிகாந்தை கடுப்பேற்ற தனுஷ் வீடு கட்டி பெற்றோருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.
150 கோடியில் வீடு
போயஸ் கார்டனில் நிலம் வாங்கி வீடு கட்டியுள்ளார் தனுஷ். ரஜினிகாந்த் விருப்பத்திற்கேற்ப தான் அவரது வீட்டின் அருகிலேயே கட்டியதாக சொல்லப்படுகிறது. பேரன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோரை தன் அருகிலேயே வைத்துக் கொள்ள ஆசைப்பட்டுள்ளார் ரஜினி.
வீடு கட்டும் வேலை முடிவதற்குள் தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்துவிட்டார்கள். தற்போது ரூ. 150 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கூடிய வீடை கட்டிமுடித்த தனுஷ் அண்மையில் தான் அதில் தன் பெற்றோருடன் குடியேறினார்.
பரவும் தகவல்
புதுமனை புகுவிழாவில் தனுஷுடன் அவரின் பெற்றோர் இருக்கும் புகைப்படங்களில் ஐஸ்வர்யா குடும்பத்தை சார்ந்த யாரும் இடம்பெறவில்லை. இந்நிலையில் யாருக்காகவும் பெற்றவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் என்பதை ஐஸ்வர்யாவுக்கும், லதாவுக்கும் புரிய வைக்க தனுஷ் வீடு கட்டி பெற்றோருக்கு பரிசு அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். ஐஸ்வர்யாவோ லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார்.