பிரபல நடிகைக்கு பட உதவி செய்த தனுஷ்...கோபத்தில் ஐஸ்வர்யா? - வெளியான புதிய தகவல்
நடிகர் தனுஷ் தனக்கு நெருக்கமான நடிகை ஒருவருக்கு பட உதவி செய்துள்ளது ஐஸ்வர்யாவின் கோபத்தை மேலும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் பன்முக கலைஞர் என்றழைக்கப்படும் நடிகர் தனுஷ் சமீபத்தில் தனது காதல் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இந்த சம்பவம் ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களை சேர்த்து வைக்க இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஐஸ்வர்யா கணவரை விட்டு பிரியவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால் தனுஷோ இனியும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறார் என கூறப்படுகிறது.
மேலும் தனுஷ் எப்போது தனியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கினாரோ அப்போதில் இருந்தே குடும்பத்தில் பிரச்சனை ஆரம்பித்துவிட்டதாகவும், தனக்கு வேண்டிய நடிகைகளை வைத்து படம் தயாரிப்பது தொடர்பாக கணவன் - மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் விவாகரத்து பிரச்சனையே புயலை கிளப்பி கொண்டிருக்க சம்பந்தப்பட்ட நடிகை ஒருவர் தனக்கு தமிழ் சினிமாவில் மீண்டும் வாய்ப்பு பெற்றுத் தாருங்கள் என தனுஷை நச்சரித்து வருகிறாராம். இப்போதிருக்கும் சூழ்நிலையில் தன்னுடைய படங்களில் நடித்தால் சரியாக இருக்காது என கூறி நண்பர்களின் படத்தில் நடிக்க தனுஷ் சிபாரிசு செய்து வருவதாகவும், இதைக் கேள்விப்பட்ட ஐஸ்வர்யா தனுஷ் மீது கடும் கோபத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.