தனுஷூக்கு வந்த அடுத்த சோதனை - உச்சக்கட்ட கடுப்பில் ரசிகர்கள்
தனுஷின் ஹாலிவுட் படமான 'தி கிரே மேன்' கிளிம்ப்ஸ் வீடியோவால் அவரது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் நட்சத்திர தம்பதிகளான தனுஷ் -ஐஸ்வர்யா தங்களது விவாகரத்து முடிவை வெளியிட்டு அனைத்து தரப்பு ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர். இது ஒருபுறமிருக்க தமிழில் கார்த்திக் நரேனின் 'மாறன்' படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் 'திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஹ்ச் நடித்து வருகிறார்.
இதனிடையே தனுஷின் ஹாலிவுட் படமான 'தி கிரே மேன்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது... 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்', 'எண்ட்கேம்' படங்களை இயக்கிய ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ ஆகிய இருவரின் இயக்கத்தில் ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிக்கா ஹென்விக் ஆகியோருடன் இணைந்து இந்தப்படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.
A first look at #TheGrayMan directed by the Russo Brothers
— chris evans updates (@evanscontent) February 3, 2022
The film stars an ensemble cast led by Ryan Gosling, Chris Evans, Ana de Armas, Regé-Jean Page, Dhanush, and Jessica Henwick pic.twitter.com/qqR4jeLpSe
இந்தப்படம் ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகும் என்று அறிவிக்கபப்ட்டுள்ள நிலையில் படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகி சில நிமிடங்களிலேயே பல லட்சம் பேரால் பார்க்கப்பட்ட உலக அளவில் ட்ரெண்டானது.
ஆனால் இந்த வீடியோவில் தனுஷ் தொடர்பான காட்சிகள் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதனை தொடர்ந்து தனுஷ் சம்பந்தமான காட்சிகளை வெளியிடுமாறு அவரது ரசிகர்கள் ட்விட் செய்து வருகின்றனர்.