ஓடிடியில் வெளியாகும் தனுஷ் படம்: ரசிகர் செய்த செயலால் அதிர்ந்த நெட்பிளிக்ஸ் நிறுவனம்

Jagame thanthiram Actor dhanush
By Petchi Avudaiappan Jun 17, 2021 12:10 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

ஓடிடியில் வெளியாகும் ஜகமே தந்திரம் படத்துக்காக ரசிகர் ஒருவர் கட் அவுட் வைத்த சம்பவம் வைரலாகி வருகிறது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ மற்றும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜகமே தந்திரம். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை உலகம் முழுவதும் ரிலீசாகிறது.

முதன் முறையாக நடிகர் தனுஷின் திரைப்படம் ஒடிடியில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் வீடுகளை தியேட்டர்களாக மாற்றி வருகின்றனர். 

இந்நிலையில் தனுஷின் தீவிர ரசிகரான பிபி சாமி எனும் ஓவியக் கலைஞர் ஜகமே தந்திரம் படத்திற்காக சூப்பரான கட் அவுட் ஒன்றை உருவாக்கியுள்ளார். தற்போது அந்த வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளது.